[X] Close

நீதிமன்ற தடையை மீறி பேனர் வைக்க அனுமதி: தலைமைச்செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு


  • முத்தலீப்
  • Posted: 12 Jan, 2019 19:24 pm
  • அ+ அ-

விதிமீறல் பேனர்கள் வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு,  அரசியல் கட்சியினர் பேனர் வைக்க  தடை விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை மீறி, சென்னை, கோவை, தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற இடங்களில் பேனர்கள் வைக்கப்படுவதாக கூறி, தமிழக அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,  உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, நகராட்சி நிர்வாக துறை செயலாளர் ஹர்மிந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகியோருக்கு எதிராக டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த  நீதிபதிகள், நகராட்சி நிர்வாக துறை செயலாளர் ஹர்மிந்தர் சிங் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 13-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

சுற்றுச்சூழலுக்கு அபாயத்தையும், சவாலையும் ஏற்படுத்தும் வகையில் தமிழக வனப்பகுதிகளில் வளர்ந்துள்ள யூகாலிப்டஸ், சில்வர்ஓக் போன்ற வெளி நாட்டு மரங்களை முழுவதுமாக அப்புறப்படுத்துவது தொடர்பாக ஆராய நிபுணர் குழுவை அமைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழக வனப்பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் யூகலிப்டஸ், சில்வர்ஓக் மரங்கள் மற்றும் வாட்டில், உன்னிசெடி போன்ற தாவரங்களை  அப்புறப்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.சதீஷ்குமார் அடங்கிய அமர்வு, ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட இந்த வகை தாவரங்களால் உள்நாட்டு தாவரங்கள் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  நிலத்தடி நீரை முழுவதுமாக உறிஞ்சிவிடும் இவ்வகை மரங்களால் மலைப்குதிகளில் 60 முதல் 70 சதவீதம்வரை மரங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறி, அவற்றை அகற்றுவது குறித்து ஆராய நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் செருகுரி ராகவேந்திர பாபு தலைமையில், இந்திய அறிவியல் மற்றும் கல்வி மையத்தின் பேராசிரியர் வி.வி.ராமன், புதுச்சேரி பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை பேராசிரியை பிரியா தேவிதார் உள்ளிட்டோர் அடங்கிய நிபுணர்கள் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த குழு,  2 மாதங்களுக்குள் அரசுக்கு பரிந்துரை வழங்க வேண்டும் எனவும்,  இந்த பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு தகுந்த  உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close