[X] Close

‘டெபாசிட் இழந்த ஸ்டாலின்’, ’20 ரூபாய் எம்எல்ஏ’: வார்த்தைகளால் வலுக்கும் டிடிவி-திமுக மோதல்


  • முத்தலீப்
  • Posted: 11 Jan, 2019 19:12 pm
  • அ+ அ-

சமீபத்தில் ஸ்டாலின் நடத்திய கிராம சபை கூட்டத்தை டிடிவி கிண்டலடித்தார். அவர் பேசியதாவது:

“உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது ஊராட்சிக் கூட்டம் போட்டிருந்தால் கிராமத்துக்கு என்ன தேவை தண்ணீர் பிரச்சினையா? சாக்கடை பிரச்சினையா? சாலைவசதி தேவையா, குளம்தேவையா குட்டைத்தேவையா? என்று கேட்டிருந்தால் ஏதாவது நன்மை கிடைத்திருக்கும்.

அதைவிட்டுவிட்டு கண் கெட்டப்பிறகு சூர்ய நமஸ்காரம் மாதிரி அங்கப்போய் மீன் விற்றுக் கொண்டிருக்கிறார். நான் திருவாரூரில் என்ன சொன்னேன் தேர்தலைக்கண்டு அதிமுகத்தான் பயப்படும் என்று சொன்னேன். அங்கு அவர்கள் உள்ளேயே போக முடியவில்லை. குக்கருக்குத்தான் ஓட்டு அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள்.

இதைப்பார்த்து பயந்த ஸ்டாலின் முதலிலேயே குரல் கொடுக்கிறார். ஆர்.கே.நகரில் உங்கள் அப்பா வாங்கிக்கொடுத்த 57 ஆயிரம் ஓட்டை தொலைத்துவிட்டு டெபாசிட் இழந்த ஸ்டாலின் என்னைப்பார்த்து சொல்கிறார் 20 டோக்கனாம். 6000 ரூபாய் ஓட்டுக்கு கொடுக்கிறார்கள் அதைவிட்டுவிட்டு 20 ரூ டோக்கன் கொடுத்தால் ஓட்டு போடுவார்களா? மக்கள் என்ன முட்டாளா?

ஆர்.கே.நகர் மக்கள் சிந்திக்கத் தெரியாதவரா? ஓட்டு வித்தியாசத்தில் என்னை வெற்றிப்பெறச் செய்தார்கள் என்றால் அதற்கு நான் என்ன எம்ஜிஆரா, ஜெயலலிதாவா? இல்லை நான் பெரிய சூப்பர் ஸ்டாரா? எதுவும் இல்லை. மக்கள் தீர்மானித்தார்கள்.

இவ்வாறு பேசிய டிடிவி ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் என்று கிண்டல் அடித்தார். கஜா புயலை ஸ்டாலின் பார்வையிட்டு உடனடியாக திரும்பிச் சென்றதை கஜா-2 என கிண்டலடிக்கும் டிடிவி தன் மீது பெரா வழக்கு உள்ளது என்று கூறுவதை உங்கள் மீதும் சர்க்காரியா வழக்கு இல்லையா?” என பதிலுக்கு கேட்க சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதற்கு பதிலடியாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தனது ட்விட்டர் பக்கத்தில் டிடிவி தினகரனை தம்பி என அழைத்தும், 20 ரூ எம்.எல்.ஏ என அழைத்தும் கோபத்தை காட்டியுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“தி.மு.க-வை திட்டினால், பா.ஜ.க-வோடு நெருக்கமாகி விடலாம், தான் சிக்கியிருக்கும் Fraud வழக்குகளில் இருந்தும் எப்படியாவது தப்பித்து விடலாம் என்கிற கணக்கில் பா.ஜ.கவுக்கு சிக்னல் கொடுக்கிறார். தம்பி என்னதான் தி.மு.க-வை திட்டி சிக்னல் கொடுத்தாலும், சிறை உறுதி.

தம்பி, தலைமறைவாக இருந்த காலத்தில் எங்கள் தலைவர் உள்ளாட்சியில் நல்லாட்சி நடத்திக் கொண்டிருந்தார். 20 ரூ MLA தம்பி. சட்டமன்ற நூலகத்தில் தமிழரசு இதழின் 2010 மே-ஜுன் இதழை வாங்கி அவர் செய்த சாதனைகளை அறியலாம்.உங்கள் சாதனைகள் என்ன என்பதை கோர்ட் கேஸ் கட்டுகளில் அறியலாம்.”  என பதிவிட்டுள்ளார்.

தனது கூட்டங்களில் திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சிக்கிறார் டிடிவி. இதன் பின்னணி செந்தில் பாலாஜியை திமுகவுக்கு இழுத்ததன் மூலம் சும்மா இருந்த டிடிவியை உசுப்பேற்றி விட்டதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல் களம் தேர்தல் காலத்தில் சூடுபிடிக்கும். தற்போது ஜெ.அன்பழகன் தனது ட்விட்டர் மூலம் மீண்டும் டிடிவியை வம்பிழுத்துள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close