[X] Close

மோடி தன்னை வாஜ்பாயுடன் ஒப்பிட்டுக் கொள்வது முரண்: ஸ்டாலின்


it-is-an-irony-that-pm-modi-compares-himself-with-vajpayee

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Jan, 2019 12:55 pm
  • அ+ அ-

பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும் மோடி ஒன்றும் வாஜ்பாய் அல்ல என்று விமர்சித்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

மக்களவை தேர்தல் வரவிருக்கும் நிலையில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் முனைப்புள்ள கட்சிகளுடன் உறவு பாராட்டி வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 

அண்மையில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ராகுல் காந்தியை மகா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று முன்மொழிந்தார்.

இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, "பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும் மோடி ஒன்றும் வாஜ்பாய் அல்ல. மோடி தலைமையிலான கூட்டணி ஆரோக்கியமானது அல்ல. பிரதமர் மோடி தன்னை வாஜ்பாயுடன் ஒப்பிட்டுக் கொள்வதே பெரும் முரண்" என்று விமர்சித்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close