[X] Close

வங்கியில் கடன் வாங்கி ரூ.77 கோடி மோசடி: சுபிக்சா நிறுவனத்தின் ரூ.50 கோடி சொத்து முடக்கம் - அமலாக்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை


subisika

  • kamadenu
  • Posted: 11 Jan, 2019 06:57 am
  • அ+ அ-

சுபிக்சா நிறுவனத்தின் ரூ.50 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி வைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகளுக்கு முன்பு சுபிக்சா என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டது. சென்னை அடையாறில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவர் இதை தொடங்கினார். நிறுவனம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே நாடு முழுவதும் சுமார் 1,600 கிளைகள் உரு வாக்கப்பட்டன. இந்நிலையில், மேலும் 2 ஆயிரம் கிளைகள் தொடங்கப் போவ தாகக் கூறிய சுப்பிரமணியன் 13 வங்கி களில் பல நூறு கோடி ரூபாய் வரை கடன் பெற்றார்.

பின்னர், தொழிலில் பங்குதாரராக சேர்ப்பதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்தும் பணம் வசூல் செய்தார். இதில், ரூ.150 கோடி வரை ஏமாற்றி விட்டதாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. இந்தப் புகார்கள் தொடர்பாக பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் சுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கிகளில் வாங்கிய பணத்தைக் கொண்டு பல்வேறு சொத்துகளை வாங்கிய தாக 2015-ம் ஆண்டு அமலாக்கத் துறை அதிகாரிகள் சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்தனர். குறிப்பாக பாங்க் ஆஃப் பரோடாவில் ரூ.77 கோடி கடன் வாங்கி சொத்துகளை வாங்கிய குற்றச்சாட்டில், முதற்கட்டமாக ரூ.9.47 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கினர்.

வங்கி கடன் மோசடி வழக்கில் சென்னை யில் சுப்பிரமணியனை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலை யில் சுப்ரமணியனின் ரூ.50.02 கோடி சொத்து களை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முடக்கியுள்ளனர். இதுவரை மொத் தம் ரூ.59 கோடியே 49 லட்சம் சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close