[X] Close

பொன்மாணிக்கவேலுக்கு அலுவலகம்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்


ponmanikavel-case

  • kamadenu
  • Posted: 10 Jan, 2019 06:44 am
  • அ+ அ-

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரி யாக, ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன்மாணிக்கவேலை உயர் நீதி மன்றம் நியமித்தது. ஆனாலும், சென்னையில் தனக்கு அலுவலகம் தரப்படாததாக கடந்த விசாரணையின்போது அவர் வேதனை தெரிவித்தார்.

இந்நிலையில், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: சிலை கடத்தல் வழக்குகளை தமிழக அரசு கையாளும் விதம் முறையாக இல்லை. பொன்மாணிக்கவேல் மற்றும் அவரது தனிப்படைக்கு தேவையான வசதிகளை அரசு செய்து தராவிட்டால், நீதித்துறையே அவசரநிலை பிரகடனம் செய்து, அதிகாரத்தை கையில் எடுத்து, தேவையான வசதிகளை செய்துதரும்.

இவ்வாறு எச்சரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close