[X] Close

ரூ.365 கோடியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள்: பொருட்காட்சி தொடக்க விழாவில் முதல்வர் தகவல் 


potutkatch

இந்திய சுற்றுலா தொழில் பொருட்காட்சி, சென்னை தீவுத் திடலில் நேற்று தொடங்கியது. பொருட்காட்சியைத் தொடங்கி வைத்து இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கைப் பார்வையிடுகிறார் முதல்வர் கே.பழனிசாமி. உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள். படம்: க.ஸ்ரீபரத்

  • kamadenu
  • Posted: 10 Jan, 2019 06:43 am
  • அ+ அ-

தமிழ்நாட்டில் ரூ.365 கோடியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சென்னை தீவுத்திடலில் 45-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் முதல்வர் கே.பழனிசாமி கலந்து கொண்டு பொருட்காட்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய தாவது:

பொங்கல் என்றதும் பொருட்காட்சி தான் நினைவுக்கு வரும். பொழுது போக்கு அம்சங்களுடன் தமிழ்நாடு அரசுத் துறைகளின் நலத்திட்டங்களை யும், வளர்ச்சிப் பணிகளையும் பொது மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பளிப் பதே இப்பொருட்காட்சியின் நோக்க மாகும். இதில், 28 மாநில அரசுத் துறைகள், 16 மாநில பொதுத்துறை நிறு வனங்கள், 2 மத்திய அரசு நிறுவனங் கள், 4 பிற மாநில அரசு நிறுவனங்கள், இந்திய செஞ்சிலுவைச் சங்கம், தமிழ்நாடு சட்ட உதவி மையம் மற்றும் 60 தனியார் அரங்குகள் இடம்பெற் றுள்ளன.

துபாயில் கட்டப்பட்டுள்ள உலகி லேயே மிக உயரமான கட்டிடத்தின் மாதிரி வடிவம், கடல்வாழ் மீன் அருங்காட்சியகம், மேகக் கூட்டங் களைப் பிரதிபலிக்கும் மாதிரி ஆகிய சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடை செய்துள்ளது. இந்த உயரிய கொள்கைக்கு இப்பொருட்காட்சியில் முக்கியத்துவம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது பாராட்டுக்குரியது. இங்குள்ள அண்ணா கலையரங்கத்தில் தினமும் நாட்டியம், நாடகம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை யில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத் தில் உள்ளது. 2017-ம் ஆண்டில் 34 கோடியே 50 லட்சம் உள்நாட்டு சுற்று லாப் பயணிகளும், 48 லட்சத்து 60 ஆயி ரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி களும் தமிழ்நாடு வந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கா கவும், சுற்றுலாத் தலங்களை மேம்படுத் தவும் ரூ.46 கோடியே 56 லட்சத்தில் பல்வேறு பணிகளும், தமிழ்நாட்டின் கடற்கரை சுற்றுலா தலங்களை மேம் படுத்த ரூ.99 கோடியே 91 லட்சத்தி லான பணிகளும், ரூ.218 கோடியில் சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றார்.

இவ்விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டி.ஜெயக்குமார், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close