சிவகங்கை தொகுதியில் நாதகவுக்கு அதிக வாக்குகள்


சிவகங்கை: சிவகங்கை மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு தமிழகத்திலேயே அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி 39 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிட்டது. சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட நாதக வேட்பாளர் எழிலரசி, 1,63,412 வாக்குகள் பெற்று 4-ம் இடம் பிடித்தார். எனினும், அக்கட்சி போட்டியிட்ட 39 தொகுதிகளில் சிவகங்கையில்தான் அதிக வாக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தொகுதிக்கு உட்பட்ட திருமயம், ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜகவைவிட கூடுதல் வாக்குகள் பெற்று, 3-வது இடத்தைப் பிடித்தது. திருமயத்தில் பாஜக 19,624 வாக்குகள்,நாம் தமிழர் கட்சி 22,917 வாக்குகள் பெற்றன. அதேபோல, ஆலங்குடியில் பாஜக 19,235 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 24,228 வாக்குகள் பெற்றன.

இந்த அஞ்சல் வாக்குகளையும் சேர்த்து 10,55,151 வாக்குகள் பதிவாகின. இவற்றில் வாக்குகள் 1,732 செல்லாதவை. காப்புத்தொகை பெற 1,75,570 வாக்குகள் தேவை. எனினும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1,63,412 வாக்குகளே பெற்றதால், காப்புத்தொகையை இழந்தார்