2026-ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி: அண்ணாமலை உறுதி


சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

சென்னை: மக்களவைத் தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன். 2026-ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நேருவுக்குப் பிறகு தொடர்ந்து 3-வது முறையாக மோடி பிரதமராகப் பதவி ஏற்கிறார். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி இலக்குகளைக் கொண்டு பாஜக தேர்தல்பணியாற்றியது. பல மாநிலங்களில் அந்த இலக்கு பூர்த்தியாகி உள்ளது. சில மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

தமிழகத்தில் பாஜக வளர்ந்திருக்கிறது. எங்கள் கூட்டணி சார்பில் தமிழகத்தில் இருந்து எம்.பி.க்களை அனுப்பிவைக்க வேண்டுமென்ற இலக்கை அடையமுடியவில்லை என்பது வருத்தம்தான். எனினும், மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்.

தமிழகத்தில் பாஜக வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதை பாடமாகக் கொண்டு, அடுத்தமக்களவைத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு எம்.பி.க்களை அனுப்புவோம். தமிழகத்தில் சில இடங்களில் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே பாஜக வெற்றியை இழந்திருக்கிறது. மாற்று கட்சியாகபாஜகவை மக்கள் விரும்புவதுதேர்தல் முடிவில் தெளிவாகிஉள்ளது.

கோவையில் நான் பெற்ற 4.50 லட்சம் வாக்குகள், பணம் கொடுக்காமல் பெற்றவை. பண அரசியலைத் தாண்டி, தமிழகத்தில் தேசியத்தை மலர வைக்க நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

இந்த தேர்தலில் 20 சதவீத வாக்குகள் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்தோம். 11.24 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. 2026-ல் நேர்மையான அரசியலை முன்னெடுக்கப் போகிறோம். திராவிடக் கட்சிகளின் தயவின்றி வெற்றி பெற முடியுமென்ற நம்பிக்கையுடன் களத்துக்கு வந்திருக்கிறோம்.

பாஜகவை முன்பு நோட்டா கட்சி என்றார்கள். இப்போது எங்கள்வாக்கு வங்கி அதிகரித்து, பெரிய கட்சிகளின் வாக்கு சதவீதம் குறைத்திருப்பதே வெற்றிதான். 2026-ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சிஅமையும். இதுவே எங்கள் இலக்கு.மூன்று முனைப் போட்டி இருமுனைப் போட்டியாக வேண்டும்.

ஒரிசாவில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியைப் பிடித்துதுபோல, தமிழகத்திலும் ஆட்சியைப் பிடிக்கும். பாஜக தொண்டர்கள் தற்போது தலைநிமிர்ந்து நடக்கும் அளவுக்கு மரியாதை கிடைத்திருக்கிறது. கட்சியை வளர்ப்பதுதான் என் வேலை. மற்றவர்களுக்கு அனுசரணையாக இருப்பது என் பணி அல்ல. அதிமுகவை பல இடங்களில் 3-வது இடத்துக்கு தள்ளியிருக்கிறோம்.

அதிமுகவினர் நாவடக்கத்துடன் பேசாததற்கு மக்கள் சரியான பரிசுவழங்கியிருக்கிறார்கள். நாம் தமிழர்நேர்மையான தேர்தலை சந்தித்துள்ளது. எங்கள் பாராட்டுகள். திராவிட அரசியலில் இருந்து தமிழகமக்கள் வெளியே வருகிறார்கள்என்பதை நாதகவும் வெளிப்படுத்திஇருக்கிறது. நான் பதவி விலக வேண்டும் என்று கனிமொழி சொல்லியிருக்கிறார். ஒருவேளை கனிமொழி பாஜகவுக்கு வருவதாக இருந்தால், நான் அதைப் பரிசீலனை செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்