[X] Close

தென் கடலோர மாவட்டங்களில் வார இறுதியில் மிதமான மழைக்கு வாய்ப்பு


rain-repprots

  • kamadenu
  • Posted: 09 Jan, 2019 09:00 am
  • அ+ அ-

தென் கடலோர மாவட்டங்களில் வார இறுதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, ‘‘மத்திய இந்தியப் பகுதிகளில் இருந்த குளிர்ந்த காற்றின் தாக்கம் வடக்கு நோக்கி வீசத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் குளிர் சற்று குறைந்துள்ளது. எனினும், மாநிலத்தில் தொடர்ந்து பனிப்பொழிவு நீடிப்பதுடன். பகலில் வெப்பநிலையும் உயர்ந்துள்ளது. இந்நிலை அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கும். அதன்பின் மீண்டும் குளிரின் தாக்கம் அதிகரிக்கும். குறிப்பாக பொங்கல் பண்டிகை நேரத்தில் மாநிலம் முழுவதுமே பரவலாக குளிர் அதிகமாக இருக்கும்.

இதற்கிடையே வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. இந்த தாழ்வு நிலை இலங்கை நோக்கி நகரும் என்பதால் தமிழகத்துக்கு பெரிய மழை இருக்காது. தென் கடலோர மாவட்டங்களில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது’’என்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close