[X] Close

33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி; முதல்வர் அறிவிப்பு


kallakurichi-district

கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயம்

  • வி.ராம்ஜி
  • Posted: 08 Jan, 2019 14:08 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகிறது. இந்தத் தகவலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தமிழகத்தில் இதுவரை 32 மாவட்டங்கள் உள்ளன. இப்போது 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சியை, சட்டப்பேரவையில் அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

சட்டப்பேரை இன்று கூடியது. இதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மிகப்பெரிய மாவட்டமாக உள்ளது விழுப்புரம் மாவட்டம். எனவே இதை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சி என தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது கள்ளக்குறிச்சி. இதனை தனி மாவட்டமாக அறிவிக்ககோரி கடந்த பல வருடங்களாகவே கோரிக்கை எழுந்து வந்தது. இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக இன்று அறிவித்தார். இதற்கு அவையில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் பலரும் வரவேற்பு தெரிவித்தார்கள்.

7,197 சதுர கி.மீ. கொண்ட மிகப்பெரிய மாவட்டமான விழுப்புரத்தில் மொத்தம் 11 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 13 வருவாய்க் கோட்டங்கள் உள்ளன. இவற்றைப் பிரிக்கும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமாகிறது.

விரைவில் இந்த மாவட்டத்துக்கு தனி ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் இதுவரை 32 மாவட்டங்கள் உள்ளது. இப்போது கள்ளக்குறிச்சி, 33வது மாவட்டமாக உதயமாகிறது.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close