[X] Close

அரசியல் பிரவேசம்: பிரகாஷ் ராஜூக்கு கமல்ஹாசன் வாழ்த்து


kamal-haasan-on-actor-prakash-raj-joining-politics

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Jan, 2019 10:24 am
  • அ+ அ-

நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜூக்கு மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

சமீப காலமாகவே ட்விட்டரில் அரசியல் பேசிவந்த பிரகாஷ் ராஜ் தற்போது நேரடி கள அரசியலிலும் இறங்கியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் மத்திய பெங்களூரு தொகுதியில் இருந்து போட்டியிடப் போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.

இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டரில், "எனது நண்பர் பிரகாஷ் ராஜின் அரசியல் பயணம் சிறக்க வாழ்த்துக்கள். சொன்னதை செய்துவிட்டார். அதற்காக நன்றி" எனப் பதிவிட்டிருக்கிறார். 

பிரகாஷ் ராஜ் அரசியல் பிரவேசத்துக்கு ஆம் ஆத்மி கட்சியும் வரவேற்பு தெரிவித்திருக்கிறது. எல்லா நல்ல மனிதர்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்று வாழ்த்தி வரவேற்றிருக்கிறது ஆம் ஆத்மி.

தென்னிந்தியாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷாலுக்குப் பிறகு அரசியல் பிரவேசத்தை அறிவித்திருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ். ட்விட்டரில் அரசியல் பேசுவதைவிடுத்து களத்துக்கு வாருங்கள் என கமலை தமிழக அரசியல் கட்சியினர் சவால் விடுத்த நிலையில் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் தனது அரசியல் கட்சியை அறிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் கமல் உறுதியாக அறிவிக்கவில்லை.

கடந்த டிசம்பர் இறுதியில் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்த ரஜினிகாந்தோ இதுவரை கட்சியையே அறிவிக்கவில்லை. ஆனால், இவர்களுக்குப் பின்னால் அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ள பிரகாஷ் ராஜ் எடுத்த எடுப்பிலேயே சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close