[X] Close

திருவாரூர் தேர்தல் ரத்துக்கு நன்றி சொன்ன தமிழிசை; கிண்டலடித்த காங்கிரஸ்


tiruvaroor-bypolls-tamilisai-vs-congress

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Jan, 2019 09:54 am
  • அ+ அ-

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை வரவேற்று நன்றி தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜனை காங்கிரஸ் கட்சியின் மாணிக் தாக்கூர் கிண்டல் செய்ய அவருக்கு தகுந்த பதிலடியும் கொடுத்திருகிறார் தமிழிசை.

திருவாரூர் தொகுதி எம்எல்ஏவும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி மறைவுக்குப்பின் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் திருவாரூர் தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தலும், 31-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் 28-ம் தேதி நடக்க இருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனை வரவேற்று நன்றி தெரிவித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. மாணிக் தாக்கூர், "திருவாரூரில் தேறுதல் சொல்ல வக்கில்லாத மோடி! தேர்தலை சந்தித்தால் NOTA உடன் போடி போடும்  நீங்க! திருவாரூர் மக்களால் டெபாசிட் போகும் பயத்தில் இருந்த எடப்பாடி, பன்னீர் அனைவரையும் காப்பாற்றிய #ECI நன்றியா?" எனப் ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழிசை பதிவு செய்த ட்வீட்டில், "இலங்கைத்தமிழரை கொன்று குவித்த காங். கட்சிக்கு இங்குள்ள திருவாரூர் தமிழரை பற்றி பேச உரிமையில்லை. மத்திய அமைச்சர்கள் நானும் வாரக்கணக்கில் களப்பணி ஆற்றியுள்ளோம். nota பற்றி பேசும் உங்களுக்கு தனியாக போட்டி போட தைரியம் உண்டா? வடகிழக்கில் காங்.? நிலைமை. மணிப்பூர், மேகாலயாவில் உங்கள் நிலைமை ?" என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close