[X] Close

பல்வேறு பகுதிகளில் நீடித்துவரும் குளிர்


cold-season

  • kamadenu
  • Posted: 07 Jan, 2019 06:32 am
  • அ+ அ-

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தற்போது வடக்கு திசையில் இருந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது. அதன் காரணமாக பல்வேறு இடங்களில் குளிர் நிலவுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை அளவின்படி, மிகக் குறைந்த அளவாக வால்பாறையில் 3.5 டிகிரி, கொடைக்கானலில் 10.7 டிகிரி, குன்னூரில் 9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. நிலப்பகுதிகளில் மிகக் குறைந்த அளவு வெப்பநிலையாக வேலூரில் 16.3 டிகிரி, திருத்தணி மற்றும் கரூர் பரமத்தியில் தலா 16.5 டிகிரி, புதுச்சேரி மற்றும் நாமக்கல்லில் 17 டிகிரி, தருமபுரியில் 17.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இந்தக் குளிர் மேலும் 10 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close