[X] Close

தங்கம் விலை பவுனுக்கு ரூ.192 குறைவு


gold-ratees

  • kamadenu
  • Posted: 06 Jan, 2019 08:25 am
  • அ+ அ-

தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.192 குறைந்து ரூ.24 ஆயிரத்து 192-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை குறைவு மற்றும் பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் தங்கம் விலை நேற்று குறைந்தது. சென்னையில் 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.192 குறைந்து ரூ.24 ஆயிரத்து 192-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 24-க்கு விற்பனை ஆனது.

இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 48-க்கு விற்கப்பட்டது. கடந்த 4 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை நேற்று குறைந்ததால் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் கணிசமாக அதிகரித்தாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close