[X] Close

தமிழிசையை அடுத்து பொன்.ராதாகிருஷ்ணன்; முதல்வருடன் சந்திப்பு – பின்னணி என்ன?


ponnar-edappadi

  • வி.ராம்ஜி
  • Posted: 05 Jan, 2019 21:26 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

தமிழிசை சவுந்தர்ராஜனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தற்போது சந்தித்து வருகிறார்.

சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் வரை நடந்தன. இந்தச் சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசும் போது, திருவாரூர் இடைத்தேர்தல் நடந்தாலும் நடக்கலாம். நடக்காமலும் போகலாம் என்று தெரிவித்தார்.

மேலும் எல்லாக் கட்சிகளுமே கஜா புயல் நிவாரணத்தை முதலில் செய்துவிட்டு பிறகு தேர்தலை நடத்தவேண்டும் என்றே சொல்லியிருக்கின்றன. திமுக கூட இதைத்தான் சொல்லியிருக்கிறது.

இத்தனைக்கும் அறுபதாயிரம் ஓட்டுக்கு மேல் வித்தியாசங்களுடன் வென்ற தொகுதியான திருவாரூருக்குத்தான் இடைத்தேர்தல். ஆனாலும் ஸ்டாலின் தயங்குகிறார். பயப்படுகிறார்.

கஜா புயல் நிவாரணங்களைச் செய்துவிட்டு, அதன் பிறகு திருவாரூருக்கு தேர்தலை நடத்தவேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்தும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழிசை சவுந்தர்ராஜனைத் தொடர்ந்து மத்திய இணை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான பொன்.ராதாகிருஷ்ணன் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிவருகிறார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல்நாட்டு விழாவுக்காக, பிரதமர் மோடி வருகிற 27ம் தேதி வருகிறார். இதையொட்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பேசுவதற்காக இந்தச் சந்திப்பு, இந்த நேரத்தில் நிகழ்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் இதன் பின்னணியில் திருவாரூர் இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி முதலானவையும் இடம்பெற்றிருக்கும் என்று சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close