[X] Close

கொடைக்கானல் வெப்பநிலை 15 ஆண்டுகளுக்கு பின் மைனஸ் டிகிரியை எட்ட வாய்ப்பு: கடும் குளிரால் நடுங்கும் மக்கள், சுற்றுலாப் பயணிகள்


kodaikanal-temperatures-are-likely-to-reach-minus-degree-after-15-years

  • kamadenu
  • Posted: 05 Jan, 2019 12:39 pm
  • அ+ அ-

பி.டி. ரவிச்சந்திரன்

கொடைக்கானல்

கொடைக்கானலில் வெப்பநிலை ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாகக் குறைந்து 0 டிகிரி செல்சியசை கடந்து மைனஸ் டிகிரியை எட்டும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், மலைவாழ் மக்கள் கடும் குளிரில் அவதிப்படுகின்றனர். பயிர்கள் கருகும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் வருகையும் வெகுவாகக் குறைந்துள்ளது.

கொடைக்கானலில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும் குளிர் காணப்படும். கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சில ஆண்டு களாகப் போதிய மழை பெய்யாததால் வெப்பநிலை ஒற்றை இலக்கத்தை தொடுவதே பெரும்பாடாக இருந்தது. கடந்த ஆண்டுகளில் அதிகபட்சம் 7 டிகிரி செல்சியஸ் வரை குறைவான வெப்பநிலை பதிவானது.

இந்த ஆண்டும் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ மழை போதிய அளவு பெய்யாமல் ஏமாற்றியது. இருந்தபோதும் திடீரென வந்த கஜா புயலால் ஒரே நாளில் கொடைக்கானல் மலைப் பகுதியில் பெருமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சில மணி நேரங்களிலேயே மலையடிவாரத்தில் உள்ள வரதமாநதி அணை 18 அடி வரை உயர்ந்து நிரம்பியது.

கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கொடைக்கானல் நகரில் வெப்பநிலை மிகவும் குறைந்து நேற்று நள்ளிரவு 4 டிகிரி செல்சியசை எட்டியது. மேல்மலைப் பகுதியான மன்னவனூர், கவுஞ்சி உள்ளிட்ட கொடைக்கானல் நகரைவிட உயரமான பகுதிகளில் வெப்பநிலை மேலும் குறைந்து காணப்பட்டது.

தற்போதுள்ள நிலையில் வெப்பநிலை மேலும் குறையும் வாய்ப்புள்ளது என்பதால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு வெப்பநிலை 0 டிகிரி செல்சியசை கடந்து மைனஸ் டிகிரியை எட்ட வாய்ப்புள்ளது. வெப்பநிலை குறைய கஜா புயலும் காரணம்.

கொடைக்கானலில் கடும் குளிர் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் வருகையும் வெகுவாக குறைந்துவிட்டது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஒரு சிலர் மட்டும் தங்கி உள்ளனர்.

உள்ளூர் மக்களும் பல ஆண்டு களுக்குப் பிறகு மிகக்குறைந்த வெப்பநிலையில் கடும் குளிரை சமாளிக்க முடியாமல் சிரமப்படு கின்றனர். ஆரஞ்சு, பீன்ஸ், கேரட் உள்ளிட்ட மலைப்பயிர்கள் கருகும் நிலையால் அதிகம் இழப்பு ஏற்படும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பகலில் 16 டிகிரி செல்சியஸ்

இதுகுறித்து கொடைக் கானலைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் வீரபத்திரன் கூறியதாவது:

கொடைக்கானல் மலைப் பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை அளவு அதிக ரித்துக் கொண்டே வந்தது. தற்போது பகலில் வெயிலின் தாக்கம் சிறிதளவே உள்ளது அதிகபட்சமாக பகலில் 16 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படுகிறது. மாலை நேரங்களில் வெகுவாகக் குறையத் தொடங்கி நள்ளிரவு மலை உச்சிகளில் 0 டிகிரி செல்சியசை தொடுகிறது.

இந்நிலை தொடர்ந்தால் விரை வில் மைனஸ் டிகிரியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 15 ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானலில் இருந்த தட்ப வெப்பநிலையாகும் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close