[X] Close

கிணற்றை காணவில்லை காமெடியைப் போல.. பண்ணைக் குட்டைகளை காணவில்லை: விழுப்புரம் ஆட்சியரிடம் பாமக புகார்


cesspool-are-missing

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 04 Jan, 2019 12:50 pm
  • அ+ அ-

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 45 ஊராட்சிகளில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் விவசாய விளை நிலங்களில் பண்ணைக்குட்டை வெட்டுதல், வரப்பு மடித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

விவசாய விளை நிலங்களில் பல இடங்களில் வெட்டாத பண்ணைக் குட்டைக்கு வெட்டியதாக கூறி அதிகாரிகளின் உதவியோடு அரசு பணத்தை பில் போட்டு எடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் ஊராட்சியில், வெட்டியதாக கூறப்பட்ட பண்ணைக் குட்டைகளை காணவில்லை என விழுப்புரம் ஆட்சியரிடம் விழுப்புரம் கிழக்கு மாவட்ட பாமக துணை செயலாளர் பாலமுருகன் மனு அளித்திருக்கிறார்.

அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் 2017-2018 மற்றும் 2018-2019 ஆண்டிற்கு விவசாய விளை நிலங்களில் பண்ணை குட்டை வெட்டுதல், வரப்பு வெட்டுதல் போன்ற பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளின் துணையோடு வெட்டாத பண்ணைக் குட்டைகளை வெட்டியதாக கூறி லட்சக்கணக்கில் அரசு பணத்தை மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.

கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் வெட்டியதாக கூறப்படும் பண்ணை குட்டைகளை காணவில்லை என்று அம்மனுவில் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close