[X] Close

வாகன ஓட்டிகளே கவனம்... இன்று நள்ளிவரவு முதல் கட்டணம் உயர்கிறது


toll-rates-to-go-up-at-21-plazas-across-tn-from-today

  • போத்திராஜ்
  • Posted: 31 Mar, 2018 16:43 pm
  • அ+ அ-

நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் இன்று நள்ளிவரவு(ஏப்ரல்1ம்தேதி) முதல் உயர்கிறது. தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

நாடுமுழுவதும் மத்திய அரசு சார்பில் 372 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒவ்வொரு நிதி ஆண்டு தொடக்கத்தின் போதும், மொத்தவிலை பணவீக்கத்துக்கு ஏற்ப கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படும்.

 இதில் தமிழகத்தில் 42 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 21 சுங்கச்சாவடிகளுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், மீதமுள்ள 21 சுங்கச்சாவடிகளுக்கான கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்படுகிறது. இதன்படி 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை உயர்கிறது. இதில் தமிழக அரசுசாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரிக்கும் இரு டோல்கேட்களிலும் கட்டணம் உயர்கிறது.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமை  பொதுமேலாளர் சென்னா ரெட்டி கூறுகையில், ஏப்ரல் 1-ந்தேதி முதல் நாடுமுழுவதும் டோல்கேட் கட்டணம் உயர்கிறது. இந்த முறை அதிக அளவு கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. பெரும்பாலான இடங்களில் கட்டணம் அதிகமாக உயராது எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்கீழ் மொத்தம் 43 டோல்கேட்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக 2 ஆயிரத்து 298 கி.மீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை இருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் வரை இந்த டோல்கேட்களில் மொத்தம் 2.37 கோடி வாகனங்கள் கடந்து சென்றுள்ளன. அதன் மூலம் ரூ.195.34 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் தமிழகத்தில் 21 டோல்கேட்களில் குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.15 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள அக்கரை மற்றும் மகாபலிபுரம் டோல்கேட்களிலும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.



 


 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close