[X] Close

மாநில மூத்தோர் தடகளப் போட்டியில் திருப்பூரை சேர்ந்த 7 பேருக்கு தங்கம்


tirupur

மாநில அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள அணி.

  • kamadenu
  • Posted: 03 Jan, 2019 19:54 pm
  • அ+ அ-

மாநில அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் தங்கம் வென்றனர்.

தஞ்சை மாவட்டம் பூண்டி தனியார் கல்லூரி விளையாட்டு திடலில் 37-வது மாநில அளவிலான மூத்தோர் தடகளப் போட்டி, கடந்த 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஆண்கள், பெண்கள் என 55 பேர் பங்கேற்றனர்.

நீளம் தாண்டுதல் மற்றும் 5 கி.மீ. நடை போட்டியில் ஆர்.கிருஷ்ணசாமி (85), 100 மீ ஓட்டப் போட்டியில் பி.சுந்தரராஜன் (80), 5 கி.மீ. நடை போட்டியில் ஆர்.முத்து சாமி, 800 மீ ஓட்டப் போட்டியில் சி.சிவானந்தன் (40), குண்டு எறிதலில் என்.முருகானந்தன் (40), போல்வால்ட் போட்டியில் ஜெ.மணிகண்டன் (35) ஆகிய 5 பேர், ஆண்கள் பிரிவில் 6 தங்கப் பதக்கங்களை வென்றனர். 5 கி.மீ. நடை போட்டியில் ஏ.பத்மாவதி (55), 400 மீ தடை ஓட்டத்தில் கே.அமிர்தம் (50) ஆகிய இருவர், பெண்கள் பிரிவில் தங்கம் வென்றனர். ஒட்டுமொத்தமாக, 13 வெள்ளி, 19 வெண்கலம் உட்பட 41 பதக்கங்களை வென்றுள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close