[X] Close

வங்கிக் கடனை திரும்ப செலுத்துவதில் ஜெட் ஏர்வேஸ் திணறல்


jet-airways

  • kamadenu
  • Posted: 03 Jan, 2019 16:08 pm
  • அ+ அ-

வங்கிகளில் பெற்ற கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது.

மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் வாங்கிய கடனுக்கான வட்டி மற்றும் அசல் தொகையின் தவணைத் தொகை ஆகியவற்றை 2018-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஆனால் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தற்காலிக நிதி நெருக்கடி காரணமாக இத்தொகையை செலுத்தவில்லை என்று ஜெட் ஏர்வேஸ் குறிப்பிட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சமீப காலமாக கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. நிறுவனத்தின் பைலட்கள், விமான பொறியாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆகியோருக்கு கால தாமதமாக ஊதியம் வழங்கப்படுகிறது. நிறுவனத்தின் குறிப்பிட்ட அளவு பங்குகளை டாடா குழும நிறுவனங்களுக்கு அளிப்பது குறித்த பேச்சுவார்த்தையிலும் இந்நிறுவனம் ஈடுபட்டிருந்தது. ஆனால் டாடா குழுமத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எதியாட் ஏர்வேஸ் நிறுவனத்துடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர பாரத ஸ்டேட் வங்கியிடம் கூடுதலாக ரூ. 1,500 கோடி கடன் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close