[X] Close

பிஹாரில் கால்நடைகளைத் திருடியதாக முதியவர் அடித்துக் கொலை


bihar-oldman-killed

  • kamadenu
  • Posted: 03 Jan, 2019 16:08 pm
  • அ+ அ-

ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளைத் திருடியதாக  55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்ற சம்பவம் பிஹாரில் நடந்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ''இந்தச் சம்பவம் பிஹாரில் அராரியா மாவட்டத்தில் நடந்துள்ளது. அடித்துக் கொல்லப்பட்டவர் பெயர் கபுல் மியான். அவர் அங்குள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளைத் திருடியதாகச் சந்தேகப்பட்டு கடந்த டிசம்பர் 29-ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை கும்பல் ஒன்றால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

அவர் ஒரு முஸ்லிம் என்று தெரிந்ததும் ’முஸ்லிம் மியான்’ என்று கூறி அந்தக் கும்பல் அவரைத் தாக்கியுள்ளது.

இந்தக் கொலை சம்பவத்தை வீடியோவாக எடுத்த கும்பல் அதனை இணையத்திலும் பதிவிட்டது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து போலீஸுக்கு இந்தத் தகவல் சென்றுள்ளது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.

குற்றவாளிகளின் முகம் அடையாளம் தெரிந்ததாகவும் விரைவில் கைது செய்யப்படுவாகள் என்றும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று துணை போலீஸ் அதிகாரி கேபி சிங் தெரிவித்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close