[X] Close

சமூகநீதிக்காக போராடியவர் கருணாநிதி; சட்டசபையில் ஓ.பி.எஸ். புகழாரம்


kalaingar-ops

கலைஞர் கருணாநிதி - ஓ.பன்னீர்செல்வம்

  • வி.ராம்ஜி
  • Posted: 03 Jan, 2019 11:04 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

சமூகநீதிக்காகப் போராடியவர் கருணாநிதி என்று சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துப் பேசினார்.

சட்டசபையில் இன்று முன்னாள் தலைவரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

கருணாநிதியின் அழகுத் தமிழுக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. ஆயிரம் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் கலைஞர் கருணாநிதியின் தமிழ் நம்மை மயக்கிப்போட்டுவிடுகிற வல்லமை கொண்டது என்பது உண்மை.

பன்முகத் தன்மை கொண்ட தலைவர். சமூகநீதிக்காகப் போராடிய ஒப்பற்ற தலைவர். சாதுர்யமாக செயல்பட்டு சமூகத்துக்குப் பாடுபட்டவர். தன்னம்பிக்கையின் மறு உருவமாகப் போற்றப்படுபவர்.

சுதந்திர தினத்தன்று மாநிலத்தின் முதல்வர்கள் தேசியக்கொடியை ஏற்றலாம் எனும் உரிமையைப் பெற்றுத்தந்தவர் கலைஞர் கருணாநிதி. அரசியல் எல்லைகளைக் கடந்து, எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் அவர் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள்.

பேரறிஞர் அண்ணாவின் அன்புத்தம்பி கலைஞர் கருணாநிதி.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close