[X] Close

பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வாபஸ் பெற்றார் கருணாஸ்


karunas-withdraws-the-confidence-resolution

கருணாஸ்: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 03 Jan, 2019 10:20 am
  • அ+ அ-

பேரவைத் தலைவர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கருணாஸ் எம்எல்ஏ வாபஸ் பெற்றார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் கருணாஸ். ஜெயலலிதா மறைவுக்குப்பின் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். கடந்த அக்டோபரில், கருணாஸ் தரப்பு வழக்கறிஞர்கள், சட்டப்பேரவைச் செயலாளரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அதில், பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதி கோரப் பட்டிருந்தது. இதையடுத்து, கருணாஸையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அதிமுகவில் எழுந்தது. இது தொடர்பாக ஏற்கெனவே விவாதிக்கப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், நேற்று சட்டப் பேரவை கூட்டத்தில் கருணாஸ் பங்கேற்றார். அதன்பின், பேரவைத் தலைவர் பி.தனபாலை சந்தித்த கருணாஸ், கடந்த அக்டோபரில் தான் அளித்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திரும்ப பெற்றுக்கொண்டார். இதை பேரவைத் தலைவர் பி.தனபாலும் உறுதி செய்துள்ளார்.

அதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமியையும் கருணாஸ் சந்தித்துப் பேசினார். அப்போது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடன் இருந்தார். முதல்வரிடம், தனது தொகுதி கோரிக்கைகள் தொடர்பான மனுவை கருணாஸ் அளித்தார்.

அதில், சிவகங்கையில் மருது பாண்டியர் சிலை நிறுவ இடம் ஒதுக்க வேண்டும். முத்துராம லிங்கத் தேவர் வாழ்க்கை வரலாற்றை அரசு பாடத் திட்டத் தில் சேர்க்க வேண்டும். திருவா டானை தொகுதியில் குடிநீர் வசதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தியுள்ளார்.

யாரும் ஆதரவளிக்கவில்லை

இது தொடர்பாக செய்தி யாளர்களிடம் கருணாஸ் கூறும் போது, ‘‘பேரவைத் தலைவர் மீது நான் அளித்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு யாரும் ஆதரவு அளிக்காத நிலையில் அதை திரும்பப் பெற்றேன். தொகுதியில் நடக்க வேண்டிய பல்வேறு திட்டப் பணிகள் தொடர்பாக முதல்வரிடம் மனு அளித்தேன்’’ என தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close