[X] Close

மக்களவை தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கும் பாஜக: 39 தொகுதிகளிலும் ஜன. 5, 6-ல் மகா சக்தி கேந்திர மாநாடு


parliament-election

  • kamadenu
  • Posted: 03 Jan, 2019 07:41 am
  • அ+ அ-

அ.அருள்தாசன்

மக்களவைத் தேர்தலை எதிர் கொள்ள பாஜக தயாராகி வருகி றது. இதற்காக, தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வரும் 5, 6-ம் தேதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகா சக்தி கேந்திர பொறுப் பாளர்கள் தலைமையில் மாநாடு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் 234 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சக்தி கேந்திர பொறுப்பாளர்களை கடந்த சில மாதங்களுக்கு முன்னரே பாஜக நியமித்திருந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் 5 வாக்குச்சாவடி களை ஒரு சக்தி கேந்திரமாக பிரித்து அதற்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 30 வாக்குச்சாவடிகளை கொண்டது மகா சக்தி கேந்திரமாக பிரிக்கப் பட்டு அதற்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த சக்தி கேந்திரங்களில் கட்சியின் அனைத்து பிரிவு தலைவர்கள், நிர் வாகிகள் உள்ளிட்டோரும் பொறுப் பாளராக பணியாற்றுகிறார்கள்.

பொறுப்பாளர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது தொடர்பாக, 30 பக்கங்கள் கொண்ட மகாசக்தி, சக்தி கேந்திர பொறுப் பாளர் கையேடு தயாரிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் அளிக்கப் பட்டிருக்கிறது. மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், சட்டப் பேரவைத் தொகுதிகள் வாரியாக வும் மகா சக்தி கேந்திர பொறுப் பாளர்கள், சக்தி கேந்திர பொறுப் பாளர்கள் பங்கேற்ற தேர்தல் ஆலோசனை கூட்டங்கள் 4 கட்டங் களாக நடத்தி முடிக்கப்பட்டது.

அடுத்தகட்டமாக வட்டாரம், கிராம அளவில் அந்தந்த பகுதி மகா சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் தலைமையில் வரும் 5, 6-ம் தேதி களில் தேர்தலுக்கான செயல்வீரர் கள் கூட்டம் தமிழகம் முழுக்க நடத்தப்படவுள்ளது. இந்த கூட்டங் களில் கட்சியின் முக்கிய நிர்வாகி கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதி களிலும் 2,027 மகா சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் தலைமையில் இந்த கூட்டங்களை மாநாடுபோல் நடத்த கட்சி திட்டமிட்டுள்ளது. கூட்டத்தின் தீர்மானங்களின் அடிப்படையில் தேர்தல் பணிகளில் பொறுப்பாளர்கள் முழுவீச்சில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close