[X] Close

ஜன.8-ம் தேதி வரை பேரவைக் கூட்டம் நடக்கும்: கருணாநிதிக்கு இன்று இரங்கல் - பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவிப்பு


karunanidhi

  • kamadenu
  • Posted: 03 Jan, 2019 07:37 am
  • அ+ அ-

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜன.8-ம் தேதி வரை நடக்கும் என்று பேரவைத்தலைவர் பி.தனபால் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் நேற்று உரையாற்றி னார். அதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமை யில் அலுவல் ஆய்வுக்குழு கூடியது. முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின், துணைத்தலைவர் துரை முருகன், கொறடா சக்கரபாணி, காங்கிரஸ் சார்பில் கே.ஆர்.ராமசாமி, கொறடா விஜயதரணி, ஐயுஎம்எல் உறுப்பினர் முகமது அபுபக்கர், பேரவைச் செயலர் கே.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு கள் தொடர்பாக பேரவைத்தலைவர் பி.தனபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆளுநர் உரை முடிந்த நிலையில், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு நாளை (ஜன.3) காலை இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங், மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், ‘நெல்’ ஜெயராமன், மருத்துவர் எஸ்.ஜெயச்சந்திரன் மற்றும் கஜா புயலில் இறந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக் கப்படும். தொடர்ந்து, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப் பினர் ஏ.கே.போஸ் ஆகியோருக்கு பேரவை முன்னவரால் இரங்கல் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு இயற்றப்படும். இரங்கல் தீர்மானங் கள் முடிந்ததும் அவையின் நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படும்.

தொடர்ந்து ஜன.4 மற்றும் 5-ம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கி நடக்கும். ஜன.6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை தினமாகும். ஜன. 7-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் மற்றும் எதிர்க் கட்சித்தலைவர்கள் பேசி முடிப் பார்கள். மறு நாள் ஜன.8-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக் கும் தீர்மானம் மீதான பதிலுரையை முதல்வர் கே.பழனிசாமி வழங் குவார்.

தொடர்ந்து, 2018-19-ம் ஆண்டுக் கான முதல் துணை நிதிநிலை அறிக்கையை துணை முதல்வர் அளிப்பார். துணை நிதிநிலை அறிக் கையின் படி மானிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். சட்ட முன் வடிவுகள் இருந்தால் எடுத்துக் கொள்ளப்படும். கேள்வி பதில்கள் வழக்கம் போல் இருக்கும். ஒத்தி வைப்பு தீர்மானங்கள் இல்லை. ராமசாமி படையாட்சியார் படம் திறப்பு குறித்து அரசு அறிவித் துள்ளது. திறக்கப்படும் தேதி தொடர்பாக அறிவிப்பு வரும்.

சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் என் மீது தீர்மானம் கொடுத்திருந்தார். அவரே அதை திரும்ப பெற்றுள்ளார். முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மற்றும் ஏ.கே.போஸ் மறைவுக்கான இரங் கல் தீர்மானங்கள் மீது உறுப் பினர்கள் பேச வாய்ப்பு அளிக்கப் படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close