[X] Close

முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்


palaniswami

  • kamadenu
  • Posted: 03 Jan, 2019 07:34 am
  • அ+ அ-

உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வானூர்தி, பாதுகாப்பு தொழில் கொள்கை ஆகியவை தொடர் பாக முக்கிய முடிவுகளை எடுப் பதற்காக தமிழக அமைச் சரவை, முதல்வர் கே.பழனி சாமி தலைமையில் இன்று கூடுகிறது.

சட்டப்பேரவை கூட்டம் நடக்கும் சூழலில் அவசர நிகழ் வுகள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டி மட்டுமே அமைச்சரவை கூட்டம் நடத்தப்படும். தமிழக சட்டப்பேர வையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நேற்று தொடங் கியது.

இதில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ‘‘பாதுகாப்புத் தளவாடங்களை யும், வானூர்தி சாதனங்களையும் தயாரிப்பதை ஊக்கப்படுத்த, தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள் கையை அரசு விரைவில் வெளி யிடும்’’ என்று அறிவித்திருந்தார். தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை, தொழில் முனைவோருக் கான கொள்கை ஆகியவை தயாராகி யுள்ளதாக கூறப்படு கிறது.

இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு முதல்வர் கே.பழனிசாமி தலை மையில் தலைமைச் செயலகத் தில் நடக்கிறது. இதில் மேற் சொன்ன தொழில் கொள்கை களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிகிறது.

வரும் 23, 24-ம் தேதிகளில் சென்னையில் நடத்தப்படும் உலக முதலீட்டாளர்கள் மாநாட் டில் ஏற்கெனவே 16 நிறுவனங் களுக்கான அனுமதி அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக சில நிறுவனங் கள் தொழில் தொடங்க அனுமதி அளிக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப் படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close