[X] Close

திருவாரூரில் ஸ்டாலின் போட்டி? துரைமுருகன் விளக்கம்


tiruvarur-mkstalin

மு.க.ஸ்டாலின்

  • வி.ராம்ஜி
  • Posted: 01 Jan, 2019 20:47 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் திமுகவின் வேட்பாளராக போட்டியிடப் போகிறாரா என்கிற கேள்விக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.

கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு திருவாரூர் தொகுதி காலியான தொகுதி என அறிவிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் தொகுதியுடன் திருவாரூர் தொகுதியும் காலியான தொகுதியாக இருக்கிறது.

மேலும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என உயர் நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியான தொகுதிகள் என அறிவிக்கப்பட்டன.

 இந்தநிலையில், மழையைக் காரணம் காட்டி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாமலேயே தள்ளிவைக்கப்பட்டது. இப்போது திடீரென திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 28ம் தேதி திருவாரூரில் தேர்தல் என்றும் 31ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை இன்று 1ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலையில் நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், கட்சியின் பொருளாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி., ஆ.ராசா, ஐ.பெரியசாமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தநிலையில், மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் சொந்த ஊர், சொந்தத் தொகுதி என்பதால், அந்தத் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வேட்பாளராக நின்று வெல்லவேண்டும் என கட்சியினர் விரும்புவதாக தகவல்கள் வெளியாகின.

இந்தப் பரபரப்புக்கு இடையே, ஆலோசனைக் கூட்டம் முடிந்து வெளியே வந்த திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம் திருவாரூரில் ஸ்டாலின் நிற்பதாக தகவல் வருகிறதே என்று கேட்கப்பட்டது.

திருவாரூரில் ஸ்டாலின் நிற்கப் போகிறார் என்று திமுக சொல்லியிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், நாளை 2ம் தேதி சட்டப் பேரவை கூடுகிறது. அதுகுறித்தும் கவர்னர் உரை இருப்பதால் அது குறித்தும் ஆலோசித்தோம்.

மேலும் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று துரை முருகன் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close