[X] Close

ரயிலில் கற்பூரம் ஏற்றினால் சிறை


train-soodam

  • kamadenu
  • Posted: 01 Jan, 2019 11:05 am
  • அ+ அ-

சேலம்

ரயில்களில் கற்பூரம் மற்றும் விளக்கு ஏற்றினால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிறப்பு ரயில்களில் பக்தர்கள் சிலர் விளக்கு மற்றும் கற்பூரங் களை ஏற்றி வைத்து வழிபடுவ தாக ரயில்வே நிர்வாகத்துக்கு புகார் வந்தன. இந்திய ரயில்வே சட்டத்தின்படி எளிதில் தீ பற்றக்கூடிய பட்டாசுகள், சமையல் எரிவாயு உருளை, அமிலம், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை ரயில்களில் எடுத்துச் செல்லக் கூடாது.

எனவே, கற்பூரம், விளக்கு களை ரயில்களில் பற்றவைத்தால் தண்டிக்கப் படுவர். அந்தவகையில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லும் பயணிகள் ரயில்வே சட்டம் 1989-ன் படி மூன்றாண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

அதேவேளை ரயில்களில் கற்பூரம் மற்றும் விளக்குகளை பற்ற வைக்கும் நபர்கள் குறித்து சகபயணிகள் பயணச்சீட்டு பரிசோதகர், ரயில் பெட்டி உதவியாளர்கள், ரயில் நிலைய மேலாளர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், பயணிகள் 182 என்ற பாதுகாப்பு பிரிவு எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close