தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளர் பொறுப்பேற்பு


கே .பெஜி ஜார்ஜ்

சென்னை: தெற்கு ரயில்வேயில் முதன்மை தலைமை வணிக மேலாளராக இருந்த நீனு இட்டியாரா, தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் பொதுமேலாளராக பதவி உயர்வு பெற்று, கடந்த வாரம் பொறுப்பேற்றார். இதையடுத்து, தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளராக கே.பெஜி ஜார்ஜ் நேற்று பொறுப்பேற்றார்.

பெஜி ஜார்ஜ், இந்திய ரயில்வே போக்குவரத்து சேவையின் (IRTS) 1990 -ம் ஆண்டு பிரிவு அதிகாரி ஆவார். சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின்கீழ் உள்ள சி.பி.எஸ்.யுவான ஹெச்எல்எல் லைஃப் கேர் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றினார்.

ரயில்வே மற்றும் பொதுபணித்துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். தெற்கு ரயில்வேயின் இயக்கம், வணிகம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் வேளாண் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற கே.பெஜி ஜார்ஜ், புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் மண் மற்றும் நீர் பாதுகாப்பு பொறியியலில் பட்ட மேற்படிப்புமும், லண்டன் இம்பீரியல் கல்லூரியில் முதுகலை பட்டமும் பெற்றவர்.