[X] Close

போட்டிகளை கண்காணிக்க விரைவில் குழு அமைக்கப்படும்: காளைகளை வதைக்காமல் ஜல்லிக்கட்டு - அரசுக்கு இந்திய விலங்குகள் நலவாரிய தலைவர் கோரிக்கை


jallikattu-issue

சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய இந்திய விலங்குகள் நலவாரியத் தலைவர் எஸ்.பி.குப்தா. உடன் விலங்குகள் நலவாரிய உறுப்பினர் ராமகிருஷ்ண ரகுவன்சி, ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழு தலைவர் எஸ்.கே.மிட்டல் உள்ளிட்டோர் | படம்: ச.கார்த்திகேயன்

  • kamadenu
  • Posted: 30 Dec, 2018 07:37 am
  • அ+ அ-

தமிழகத்தில் கடந்த ஆண்டு, விதி களை முறையாக பின்பற்றி ஜல்லிக் கட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த முறையும் காளைகளை வதைக்காமல் ஜல்லிகட்டு நடந்த வேண்டும் என்று இந்திய விலங்கு கள் நலவாரியத் தலைவர் எஸ்.பி. குப்தா, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய விலங்குகள் நலவாரி யம் சார்பில், விலங்குகள் வதைத் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வாரியத்தின் தலைவர் எஸ்.பி.குப்தா தலைமையில் சென்னையில் நேற்று நடை பெற்றது.

அதில் கால்நடைத் துறைச் செயலர் கே.கோபால், இயக்குநர் ஏ.ஞானசேகரன் மற்றும் விலங்கு கள் நலவாரிய உறுப்பினர் ராம கிருஷ்ண ரகுவன்சி, ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழு தலைவர் எஸ்.கே.மிட்டல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் இந்திய விலங்குகள் நல வாரியத் தலைவர் எஸ்.பி. குப்தா செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

எறும்பு முதல் யானை வரை அனைத்து உயிரினங்களுக்கும் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு. அதை உறுதி செய்வதே இந்த வாரியத்தின் நோக்கம். இக்கூட்டத்தில் விலங்குகள் நலம் சார்ந்த 13 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழக அரசு உருவாக்கியுள்ள மாநில விலங்குகள் நல வாரியத்தில் சில குறைபாடுகள் உள்ளன. அதை கூட்டத்தில் சுட்டிக்காட்டி இருக்கிறோம்.

மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் விலங்கு வதை தடுப்புச் சங்கங்களை அமைக்க வும், ஆட்சியர் தலைமை யேற்காத போலி விலங்கு வதைத் தடுப்புச் சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

நாங்கள் கலாச்சாரத்துக்கு எதிரானவர்கள் இல்லை. கலாச் சாரத்துக்காக விலங்குகள் வதைக் கப்படுவதை ஏற்க முடியாது. விரைவில் ஜல்லிகட்டுப் போட்டி களை கண்காணிக்க குழு அமைக்கப்படும்.

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கடந்த ஆண்டு பல வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி இருந்தோம்.

அதை தமிழக அரசும் முறையாகப் பின்பற்றியது. இந்த முறையும் காளைகளை வதைக்காமல் ஜல்லிகட்டு நடந்த வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறோம்.

மேலும் கால்நடைகள் சாலை களில் சுற்றுவதை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தடுக்க வேண்டும். அவற்றுக்கு தேவை யான உணவு, தங்குமிடம் போன்றவை உரிமையாளரால் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியிருக் கிறோம். எங்கள் அனைத்து அறிவுறுத்தல்களையும் நிறை வேற்றுவதாக அதிகாரிகள் உறுதி யளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close