[X] Close

பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு ஜன. 9-ம் தேதி முதல் தொடங்கும்: நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம்


pongal-festival-buses

  • kamadenu
  • Posted: 30 Dec, 2018 07:34 am
  • அ+ அ-

பொங்கல் பண்டிகையை முன் னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன் பதிவு வரும் 9-ம் தேதி தொடங்க உள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு போக்குவரத்து மாற்றங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், தாம்பரம், மாத வரம், பூந்தமல்லி, கே.கே.நகர் ஆகிய 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வரும் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையில் மேற்கூறிய இடங்களில் இருந்து தினமும் இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் 5,163 சிறப்பு பேருந்துகள் என சென்னையில் இருந்து மொத்தம் 14,263 பேருந்துகள் இயக்கப்படும்.

இதேபோல், பிற ஊர்களில் இருந்து 4 நாட்களுக்கு மொத்த மாக 10,445 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையில் 3776 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் பொங்கல் பண்டிகை முடிந்து பிற முக்கிய பகுதிகளிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 7,841 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேட்டில் 26, தாம்பரம் சானடோரியத்தில் 2, பூந்தமல்லி மற்றும் மாதவரத்தில் தலா ஒரு முன்பதிவு மையம் என மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும். வரும் 9-ம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். www.tnstc.in www.redbus.in, www.paytm.com www.busindia.com ஆகிய இணையதளங்களின் மூலமும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

வழித்தட மாற்றம்

கோயம்பேட்டில் இருக்கைகள் நிரம்பிய பேருந்துகள் மதுரவாயல், பூந்தமல்லி, நசரத்பேட்டை வழியாக வண்டலூர் செல்லும். மேலும், முன்பதிவின் போது தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் குறிப்பாக முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் ஊரப் பாக்கம் (கிளாம்பாக்கம்) தற்காலிக பேருந்து நிலையத்துக்கு சென்று பேருந்துகளில் பயணம் மேற் கொள்ள வேண்டுமென அறிவுறுத் தப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம்

வரும் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையில் கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம் பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுக் குன்றம், செங்கல்பட்டு அல்லது பெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக சென்றால். போக்கு வரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யலாம்.

கனரக வாகனங்களின் இயக்கம் வரும் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மதியம் 2 முதல் அதிகாலை 2 மணி வரை மதுரவாயல் முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித் தடங்களை தவிர்த்து வழித்தட மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளால் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் வரை போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close