[X] Close

பேராசிரியர் அன்பழகன் 2 நாளில் வீடு திரும்புவார்; - மு.க.ஸ்டாலின்


stalin-anbazhagan

க.அன்பழகன் - மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)

  • வி.ராம்ஜி
  • Posted: 28 Dec, 2018 21:47 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடல்நலக் குறைவால் சென்னை ஆயிரம்விளக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் 2 நாளில் நலம் பெற்று வீடு திரும்புவார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், உடல்நலக்குறைவு காரணமாக இன்று 28ம் தேதி சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

இதை அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்று அன்பழகனைச் சந்தித்து நலம் விசாரித்தனர்.

அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு சளித்தொல்லை காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில், அன்பழகனை நலம் விசாரித்த பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

பேராசிரியரைச் சந்தித்து நலம் விசாரித்தேன். மார்பில் தொற்று ஏற்பட்டுள்ளதால் சளித் தொந்தரவு அதிகமாகி உள்ளது. இதனால் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்னும் இரண்டு நாளில் பேராசிரியர் அன்பழகன் வீடு திரும்புவார்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close