[X] Close

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி-யின் வீரியம் குறைவு: மதுரை அரசு மருத்துவமனை டீன் தகவல் 


hiv-pregnant-lady

  • kamadenu
  • Posted: 28 Dec, 2018 11:39 am
  • அ+ அ-

எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால் எச்ஐவி வீரியம் குறைவாக உள்ளது என்று மதுரை அரசு மருத்துவமனை டீன் (பொ) சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிக்கு ரத்தப் பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல்நிலை குறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனை டீன் (பொ) சண்மு கசுந்தரம் நேற்று இரவு செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 9 பேர் கொண்ட மருத்துவக் குழு வினர் தொடர்ச்சியாக சிகிச்சை அளித்து வருகின்றனர். கர்ப்பிணிப் பெண்ணுக்கு கல்லீரல், ரத்தம் என அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப்பட்டன. இவற்றின் முடிவுகள் சீராக உள்ளன. ஆனால் மஞ்சள் காமாலை சிறிதளவு உள்ளது.

பரிசோதனையில் எச்ஐவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அப்பெண்ணுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால் எச்ஐவியின் வீரியம் சற்று குறைவாக உள்ளது. சாதாரண மனிதனின் உடல்நிலை எப்படி உள்ளதோ அந்த அளவுக்குத்தான் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நிலையும் உள்ளது என்றார்.

கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேற்று அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் மற்றும் எடுக்கப்பட்ட பரிசோதனைகள் அடங்கிய மருத்துவ அறிக்கையை அரசுக்கு டீன் சண்முகசுந்தரம் நேற்று இரவு அனுப்பி வைத்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close