[X] Close

10ம் வகுப்பு தேர்வு நேரத்தில் மாற்றம் – அரசுத் தேர்வு இயக்ககம் அறிவிப்பு


10th-exam-time

  • வி.ராம்ஜி
  • Posted: 26 Dec, 2018 21:21 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொழித்தாள் தேர்வுகளுக்கு மட்டும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

பத்தாம் வகுப்பில், மொழித்தாள் தேர்வு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய மொழித் தாள் தேர்வுகள், மதியம் 2 மணிக்குத் தொடங்கி மாலை 4.45 மணி வரை நடைபெறும்.

கணிதம், அறிவியல், சமூக அறிவியல், விருப்ப மொழிப் பாடத் தேர்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 12.25 மணி வரை நடைபெறும்.

தேர்வு நேர புதிய நடைமுறையை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கிச் சொல்லவேண்டும். பள்ளியில் உள்ள தகவல் பலகைகளில் இதுகுறித்த விவரங்களை ஒட்டி அறிவிப்பதன் மூலமாகவும் மாணவர்களின் பார்வையில் படும்படி வைக்கவேண்டும்.

இந்தப் புதிய நடைமுறையை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்றவேண்டும்.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close