[X] Close

தமிழ், ஆங்கில வார்த்தைகளை மாணவர்கள் கற்க புதுயுக்தி: புதுப்பட்டி தொடக்கப்பள்ளியில் நடவடிக்கை


pudhupatti-school-new-teaching-method

ராசிபுரம் அருகே புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை சுவற்றில் கொட்டை எழுத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ள தமிழ், ஆங்கில எழுத்துகளை படிக்கும் மாணவியர்.| படம்: கி. பார்த்திபன்.

  • kamadenu
  • Posted: 26 Dec, 2018 11:50 am
  • அ+ அ-

ராசிபுரம் அருகே புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளி வகுப்பறை சுவற்றில் காய்கறி, விலங்குகள் ஆகியவற்றின் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொட்டை எழுத்துகளில் ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில் அங்குள்ள ஆசிரியர்கள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி பள்ளி வகுப்பறையின் முன்புற சுவரில் ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் காய்கறி, விலங்குகள் ஆகியவற்றின் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில் எழுதியுள்ளனர்.

இதுபோல், தமிழ், ஆங்கில மாதங்கள், தமிழ், ஆங்கில எழுத்துகள் உள்ளிட்டவையும் பெரிய எழுத்துகளில் எழுதி வைத்துள்ளனர். இவற்றை மாணவ, மாணவியர் இடைவெளி நேரங்களில் அவர்களாகவே வாசித்து அறிந்து கொள்கின்றனர். இவற்றை படிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கட்டாயப் படுத்தாமலே மாணவர்கள் படிப்பதுடன், தங்களுக்குள் கலந்துரையாடி ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளி தலைமை யாசிரியர் ஜெ.மகேஸ்வரி கூறுகையில், இந்தப் பள்ளி கடந்த 1907-ம் ஆண்டு கட்டப்பட்டது. நூற்றாண்டு கடந்த இப்பள்ளியில் தற்போது 156 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். மாணவர்களின் கல்வியை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட் கிளாஸ் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோல், பள்ளியளவில் ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதன்படி வகுப்பறை சுவற்றில் எண்கள், காய்கறி, விலங்குகளின் பெயர்கள், தமிழ், ஆங்கில மாதங்கள் கொட்டை எழுத்தில் மாணவர்கள் எளிதில் படிக்கும்படி எழுதப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் தங்களின் இடைவேளை நேரங்களில் ஆர்வமுடன் படித்து தெரிந்து கொள்கின்றனர்.

இதுபுத்தகத்தை தாண்டி மாணவர்களின் வாசிப்பை மேம்படுத்துகிறது. இதுபோல், காய்கறி தோட்டம் அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கையும் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close