[X] Close

கட்சியில் மீண்டும் ஓபிஎஸ் தம்பி; மன்னிப்போம் மறப்போம் - அமைச்சர் ஜெயகுமார்


ops-brother-jayakumar

அமைச்சர் ஜெயகுமார்

  • வி.ராம்ஜி
  • Posted: 26 Dec, 2018 11:00 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

ஓபிஎஸ் தம்பி ராஜாவை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டிருப்பது குறித்து கேட்டதற்கு, அண்ணா சொன்னது போல, மன்னிப்போம் மறப்போம் என்று ஏற்றுக்கொள்வது கட்சியில் நடப்பதுதான் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

சுனாமி தினத்தையொட்டி சென்னை காசிமேடு பகுதியில் அஞ்சலி செலுத்துவதற்காக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்ததாவது:

ஹெச்ஐவி ரத்தத்தை கர்ப்பிணிக்குச் செலுத்திய விவகாரம் வேதனைக்குரியது. இதுகுறித்து ஆர்டிஓ நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த நோய்த்தோற்றில் இருந்து அவரை மீட்டெடுப்பதற்கு என்னென்ன வழிமுறைகள் உண்டோ அவற்றை செய்து தருவதற்கு அரசு தயாராக இருக்கிறது.

தமிழகம் முழுவதும் உள்ள ரத்தவங்கிகளில் உள்ள ரத்தங்களை மறுபரிசீலனை செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஓபிஎஸ் சகோதரர் ராஜா, மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார். இது நாலு நாள், ரெண்டுநாள் என்றெல்லாம் இல்லை. வருத்தம் தெரிவித்து தகவல் சொன்னாலோ கடிதம் அனுப்பினாலோ அதுகுறித்து பரிசீலனை செய்து சேர்த்துக்கொள்ளப்படுவது எல்லா கட்சியிலும் உள்ள விஷயம்தான்.

ஜெயலலிதா இருந்தபோது கூட காலையில் நீக்கிவிட்டு மாலையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. திமுகவிலும் இது நடந்திருக்கிறது. இதுகுறித்து திமுகவில் நீங்கள் கேட்பீர்களா?

அண்ணா சொன்னது போல, மன்னிப்போம் மறப்போம் என்று ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான். அதேபோல் ஒழுங்கு நடவடிக்கை என்றுதான் சொல்லப்படுமே தவிர, அவர்கள் என்ன மீறினார்கள், எந்த விதமாக கட்சிக்கு பங்கம் விளைவித்தார்கள் என்றெல்லாம் எந்தக் கட்சியும் விளக்கம் அளிக்காது.

உயர் மின்கோபுரம் அமைத்து மின் வசதி செய்து கொடுப்பதும் அவசியம். அதேபோல விவசாயத்தைக் காப்பதும் அவசியம். இந்த இரண்டுமே இரண்டு கண்களைப் போன்றவைதான்.

இவ்வாறு ஜெயகுமார் தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close