[X] Close

தாமரை கருகும் வாசனை தெற்கு வரைக்கும் அடிக்கிறது!- ஜோதிமணி கிண்டல்


jothimani-slams-tamilisai

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Dec, 2018 10:46 am
  • அ+ அ-

"வடக்கே தாமரை கருகும் வாசனை தெற்கு வரைக்கும் அடிக்கிறது. இதில் தமிழகத்தில் தாமரை மலர்ந்துட்டாலும்.." என தமிழக பாஜகவை கிண்டல் செய்துள்ளார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி.

இது தொடர்பாக ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், "வடக்கே தாமரை கருகும் வாசனை தெற்கு வரைக்கும் அடிக்கிறது. இன்னும் ஓராண்டில் மத்தியில்,மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானாவில் தாமரை 'கை'யில் கசங்கிகிடக்கப்போகிறது. 

இதில் தமிழகத்தில் தாமரை மலர்ந்துட்டாலும்" எனப் பதிவிட்டுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ். 2019 மக்களவைத் தேர்தலின் முன்னோட்டமாகப் பார்க்கப்பட்ட இந்தத் தேர்தல் முடிவு காங்கிரஸுக்கு புதிய பலத்தைக் கொடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சி புதிய உற்சாகத்துடன் மகா கூட்டணியை நோக்கி காய்களை நகர்த்தி வருகிறது. ஆனாலும், தமிழகத்தில் திரிபுராவைப் போல பாஜக ஆட்சியைப் பிடிக்கும், தாமரை மலர்ந்தே தீரும் என்றெல்லாம் சவால் விடுத்துவரும் பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜோதிமணி இந்த கிண்டல் ட்வீட்டைப் பதிவு செய்திருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close