சென்னை அயனாவரத்தில் இரவு முழுவதும் மின்வெட்டு: மக்கள் அவதி


கோப்புப்படம்

சென்னை: அயனாவரத்த்தில் இரவு முழுவதும் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர். சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அயனாவரம் பகுதியில் நேற்று இரவு முழுவதும் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.