[X] Close

ராமதாஸை சமூக வலைதளத்தில் தரக்குறைவாக விமர்சித்தவர் கைது 


man-arrested

  • kamadenu
  • Posted: 26 Dec, 2018 07:15 am
  • அ+ அ-

பாமக நிறுவனர் ராமதாஸ் சமூக வலைத்தளத்தில் தரக்குறைவாக விமர்சித்த இளைஞர் ஒருவரை திண்டிவனம் அருகே போலீஸார் கைது செய்தனர்

திண்டிவனம் அருகே உள்ள கிளியனூர் காடான் குளம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர் என்பவரது மகன் ஸ்ரீகாந்த்(33). ஓட்டுநரான இவர், தனது முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமகவினரை தரக்குறைவாக விமர்சனம் செய்து வந்ததாக புகார்கள் வந்தன.

பாமக நிறுவனர் மீது ஸ்ரீகாந்த் வைத்துள்ள விமர்சனத்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு பொது அமைதிக்கு குத்தகம் ஏற்படும் என்று பாமக ஒன்றிய செயலாளரான சுதாகர் கிளியனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஸ்ரீகாந்தை கைது செய்து சிறையிலடைத்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close