[X] Close

தமிழக அமைச்சரவை 24-ல் கூடுகிறது


tamilnadu-assembly

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

  • kamadenu
  • Posted: 22 Dec, 2018 09:25 am
  • அ+ அ-

தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில் வரும் 24-ம் தேதி நடக்கிறது.

15-வது சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், கடந்த ஜனவரி 8-ம் தேதி தொடங்கியது. ஆளுநர்பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார். அதன்பின், நிதிநிலை அறிக்கை தாக்கலுக்காக மார்ச்சில் பேரவை மீண்டும் கூடியது. தொடர்ந்து, துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதத்துக்காக பேரவை கூட்டத்தொடர் நடத்தப்பட்டது. இதையடுத்து, மேகேதாட்டு அணை தொடர்பாக விவாதிப்பதற்காக கடந்த 6-ம் தேதி மாலை பேரவையின் சிறப்புக் கூட்டம் நடந்தது. சமீபத்தில் பேரவைக் கூட்டத்தை முடித்து வைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார்.

வரும் 2019-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டம், ஜனவரி முதல் வாரத்தில் கூடலாம் என தெரிகிறது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றவுள்ள உரை இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த உரைக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தமிழக அமைச் சரவை, முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் வரும் 24-ம் தேதி (திங்கள்கிழமை) பகல் 12 மணிக்கு தலைமைச் செய லகத்தில் கூடுகிறது. ஸ்டெர்லைட் விவகாரம், மேகேதாட்டு அணை தொடர்பாகவும் அமைச்சர வைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close