[X] Close

பலாத்கார குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: நேபாளத்தில் இது முதன்முறை


nepal-court-gives-life-imprisonment-for-rape-convict

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Dec, 2018 12:24 pm
  • அ+ அ-

பலாத்கார குற்றவாளிக்கு முதன் முறையாக ஆயுள் தண்டனை விதித்து நேபாள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேபாளத்தி காஸ்கி மாவட்ட நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பொக்காரா கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியை 27 வயது இளைஞர் குசும் பவுடெல் பலாத்காரம் செய்து கழுத்தை நெறித்து கொன்றார்.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் காஸ்கி மாவட்ட நீதிமன்றத்தின் தனிநபர் அமர்வு நீதிபதி யோகேந்திர பிரசாத் ஷா குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.

2017 கிரிமினல் சட்டப்பிரிவு 41-ன் கீழ் அவர் இத்தண்டனையை விதித்தார். நேபாளத்தில் பலாத்கார குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் 23-ம் தேதியன்று பவுடல் 10 வயது சிறுமியை புதருக்குள் இழுத்துச் சென்று பலாத்காரம் செய்து கழுத்தை நெறித்து கொல்லவும் செய்தார். ஆனால், சந்தேகத்தின் பேரில் அடுத்த நாளே போலீஸார் பவுடெலை கைது செய்தனர். பவுடெல் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். சம்பவம் நடந்தபோது தான் மது மற்றும் போதை மாத்திரைகளை உட்கொண்டிருந்ததாகக் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close