[X] Close

பூம்புகார் கடலில் மூழ்கி கல்லூரி மாணவிகள் 3 பேர் பரிதாப மரணம்


students-death

  • kamadenu
  • Posted: 20 Dec, 2018 10:40 am
  • அ+ அ-

பூம்புகார் கடலில் குளித்த கல்லூரி மாணவிகள் 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாகை மாவட்டம் மயிலாடு துறையில் உள்ள ஞானாம்பிகை கல்லூரி விடுதியில் தங்கிப் படிப்பவர்களில் 7 மாணவிகள் நேற்று காலை பூம்புகாருக்கு சுற்றுலா வந்தனர். 7 பேரும் கடலில் குளித்தனர்.

அப்போது, முதலாமாண்டு தமிழ் இலக்கியம் படித்து வந்த சிவப்பிரியா(18), 2-ம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வந்த மஞ்சு(19), 2-ம் ஆண்டு தமிழ் இலக்கியம் படித்து வந்த விவேகா(19) ஆகிய 3 பேரும் எதிர்பாராதவிதமாக கடல் அலை யின் சீற்றத்தால் தடுமாறி, கடல் நீரில் மூழ்கித் தத்தளித்தனர். சிறிது நேரத்தில் அலைகளால் கடலுக்குள் இழுத்துச் செல்லப் பட்டனர்.

இதைப் பார்த்த மற்ற மாணவி கள் அச்சத்தில் அலறினர். அருகில் இருந்த மீனவர்கள் சிலர் கடலில் குதித்து, 3 மாணவிகளையும் சடலங்களாக மீட்டனர். தகவல றிந்த பூம்புகார் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கடலூர், நாகை மாணவிகள்

விசாரணையில், சிவப்பிரியா கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், மஞ்சு மற்றும் விவேகா ஆகிய 2 பேரும் நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பொறையாறைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

3 மாணவிகளின் உடல்களை யும் கைப்பற்றிய போலீஸார், அவற்றை பிரேத பரிசோதனைக் காக சீர்காழி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close