[X] Close

கோவை சிறையில் தொடரும் கைதிகள் உயிரிழப்பு: பராமரிப்பு குறைபாடு காரணம் என குற்றச்சாட்டு


deaths-in-kovai-prison

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 20 Dec, 2018 10:40 am
  • அ+ அ-

கோவை மத்தியசிறையில் உள்ள 12 பிளாக்குகளில் மொத்தம் 1,704 கைதி கள் அடைக்கப்பட்டுள்ளனர். மத்திய சிறை வளாகத்தில் சிறைத் துறை மருத்துவமனை உள்ளது.

இந்நிலையில், கோவை மத்திய சிறையில் கடந்த சில மாதங்களாக கைதிகள் உயிரிழப்பு தொடர்ந்து வருகிறது. உடல்நலக்கோளாறு, சரியான பராமரிப்பின்மை, முறை யான சிகிச்சை வசதி இல்லாதது, சத்தான உணவுகள் வழங்கப்படாதது போன்றவை கைதிகள் இறப்பிற்கு முக்கிய காரணமாக கூறப் படுகிறது. இங்கு அடைக்கப்பட் டுள்ள கைதிகளில் சரிபாதி சதவீதத்தினர் 40 வயதைக் கடந்தவர்கள்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள வயோதிக கைதிகளுக்கு பல்வேறு உடல்நலக்கோளாறுகள் உள்ளது. இவர்களுக்கு குறிப்பிட்ட நாட் களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து, தினசரி மருந்து, மாத்திரை வழங்க வேண்டும். ஆனால், இவ் வகை கைதிகளுக்கு முறையாக உடல்நலப்பரிசோதனை செய்வதில்லை,

தேவையான அளவுக்கு மருந்து, மாத்திரைகள் தரப்படுவ தில்லை. நோய் பாதிப்பு தீவிரம் அடைதல், மாரடைப்பு, வலிப்பு போன்ற நோய்கள் ஏற்பட்டால் அந்த கைதிகள், கால தாமதத் திற்கு பின்னரே, சிறை மருத்துவ மனைக்கும், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக் கும் கொண்டு செல்லப்படுகின் றனர். இவ்வாறு தாமதமாக கைதி கள் சிகிச்சைக்காக சேர்க்கப்படு வதும் கைதிகள் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாகிறது.

கைதிகள் உயிரிழப்பு

சமூகஆர்வலர்கள் கூறும் போது,‘‘கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த, ஆயுள் தண்டனை கைதி அந்தோனி ஆனந்த்(43), 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற பெருந் துறையை சேர்ந்த குருசாமி(59), ஆயுள் தண்டனை கைதி பாலக் காட்டை சேர்ந்த மாணிக்கம்(57), தண்டனை கைதி சேலம் சூரமங்க லத்தை சேர்ந்த ராஜேந்திரன்(57) ஆகியோர் கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து இறந் துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 30 சிறைக் கைதிகள் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளனர். கைதிகளின் இறப்பை தடுக்க சிகிச்சை வசதியை மேம்படுத்த வேண்டும்,’’என்றனர்.

வழக்கறிஞரும், மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் தேசிய குழு உறுப்பினருமான ச.பாலமுருகன் கூறியதாவது: சிறையில் கைதி களுக்கு மருத்துவம் தருவது குறித்து வழிகாட்டும் நெறிமுறை களை உச்சநீதிமன்றம் வெளியிட் டுள்ளது. சிறையில் அடைக்கப்பட் டுள்ள கைதிகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் போது, உயர் மருத்துவ சிகிச்சை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுவ தில்லை. உடல்நலம் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு உடனடியாக உரிய சிகிச்சை தரப்படுவதில்லை. தாமத சிகிச்சை கைதிகளின் உயிரிழப் புக்கு முக்கிய காரணமாகிறது. சிறையில் உள்ள மருத்துவமனை யும் போதிய கட்டமைப்பு, சிகிச்சை யளிக்கும் வசதிகள் இல்லாமல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கைதிகளின் பராமரிப்பில் கவனம்

கோவை மத்திய சிறை கண் காணிப்பாளர் ஆர்.கிருஷ்ணராஜ் கூறியதாவது: கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள மருத்துவ மனையில் 2 மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். தினசரி சராசரியாக 50-க்கும் மேற்பட்ட கைதிகள் பரிசோதனைக் காக சிறை மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையில் இ.சி.ஜி வசதி உள்ளது. சிறை வளாகத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படும் கைதிகள் மீட்கப்பட்டு, உடனடியாக சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடல்நல பாதிப்பு தீவிரமாக இருந்தால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படு கிறது. சிறை கைதிகளுக்கு தரமான, சத்தான உணவுகளே தினசரி வழங்கப்படுகிறது. கைதிகளின் பராமரிப்பில் முழு கவனம் செலுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

- டி.ஜி.ரகுபதி

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close