மோடியின் தியானத்தில் எதிர்க்கட்சிகள் விஷமத்தனமான அரசியல்: அண்ணாமலை காட்டம்


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார்.

திருவண்ணாமலை: கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்வதை எதிர்க் கட்சிகள் விஷமத்தனமான அரசியல் செய்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷாவை தொடர்ந்து தமிழக பாஜக தலைவரும் ஆன்மிக யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவர், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 543 மக்களவைத் தொகுதிகளிலும், தங்கள் பிரதிநிதிகளை மக்கள் தேர்வு செய்திருப்பார்கள். தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி கட்டிலில் அமர வேண்டுமென அண்ணாமலையாரிடம் வேண்டிக் கொண்டுள்ளேன். வேண்டுதலை சிவபெருமான் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளதுரையை காலையில் பணி யிடை நீக்கம் செய்துவிட்டு, மாலையில் பணியிடை நீக்க உத்தரவை திரும்ப பெற்றுள்ளனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு உள்ளதால் பொறுத்திருந்து பார்ப்போம். காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகளை ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்வது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி செயலாகும். இண்டியா கூட்டணி கூட்டம் புதுடெல்லியில் இன்று (நேற்று) மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. கட்சிகளின் பெரிய தலைவர்கள் செல்ல வில்லை. அனைத்து கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமே பங்கேற் கின்றனர். வாக்குப் பதிவுக்கு பிறகு வெளியிடப்படும் கருத்துக் கணிப்பில் தங்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்க போவதில்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது காங்கிரஸ் தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது.

தேர்தல் நடைபெறும் வரை தான் இண்டியா கூட்டணி கட்சிகளின் நாடகங்கள் நடத்தப்பட்டன. நாங்கள் வெற்றி பெறுவோம், நாங்கள் தான் பிரதமர், துணை பிரதமர், கேபினட் அமைச்சர் என கூறி வந்தனர். ஆனால், 7 கட்ட தேர்தல் முடிந்த பிறகு, மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்பார் என அவர் களுக்கு தெரிந்து விட்டது. பிரதமர் மோடியின் தியானத்தை விமர்சனம் செய்துள்ளனர்.

தனிப்பட்ட நிகழ்வு காரணமாக கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார். அவரை வரவேற்க ஒரு பாஜக தொண்டர் கூட செல்லவில்லை. விவேகானந்தர் பாறை என்பது விவேகானந்த கேந்தி ராவுக்கு சொத்தாகும். இது தனியார் சொத்து. மக்கள் பயன்படுத்தி வரு கின்றனர். இதற்கு, அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி தேவையில்லை.

பிரதமர் மோடி தியானம் செய்யும் போது, விவேகானந்தர் பாறையை மக்களும் பார்வையிட்டனர். யாரும் தடுக்கவில்லை. மக்களுக்கு இடையூறு கொடுக்காமல் பிரதமரின் பாதுகாப்பு குழு செயல்பட்டுள்ளது. படகும் சென்றது, மக்களும் சென்றனர். இதில் எதிர்க்கட்சிகள் விஷமத்தனமான அரசி யல் செய்துள்ளன’’ என்றார். பின்னர், அண்ணாமலையுடன் பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். முன்னதாக, அண்ணாமலைக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங் கப்பட்டது.