[X] Close

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது


rapist-arrested

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 Mar, 2018 15:11 pm
  • அ+ அ-

ஆலங்குளம் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டார். 
ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவி, மாலையில் பள்ளி முடிந்ததும் சங்கரன்கோவில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார்.

அப்போது அந்த வழியாக ஊத்துமலையைச் சேர்ந்த அனுமந்திரம்(60) என்பவர், இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். தான் ஊத்துமலைக்கு செல்வதாகக் கூறி, மாணவியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். ஒரே ஊரைச் சேர்ந்தவர் என்பதால், அவருடன் மாணவி சென்றுள்ளார். 

வழியில் அமுதாபுரம் பகுதியில் வாகனத்தை நிறுத்திய அனுமந்திரம், வலுக்கட்டாயமாக மாணவியை அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

மாணவியின் கூச்சல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்துள்ளனர். பொதுமக்களை பார்த்ததும் அனுமந்திரம் தப்பியோட முயன்றுள்ளார். அவரை பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடித்தனர். சரமாரியாக அடித்து உதைத்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இதுகுறித்து ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, அனுமந்திரத்தை கைது செய்தனர். 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close