[X] Close

வேலை நிறுத்தத்தால் வங்கிகளுக்கு 5 நாள் விடுமுறையா?- ஊழியர் சங்கம் விளக்கம்


bank-leave

  • kamadenu
  • Posted: 17 Dec, 2018 10:26 am
  • அ+ அ-

ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக 5 நாட்களுக்கு வங்கி கள் இயங்காது என சமூக வலை தளங்களில் வௌியாகியுள்ள தகவல் தவறானது என வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:

தேனா வங்கி, பரோடா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகிய வற்றை இணைத்து ஒரே வங்கி யாக ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு பாதிக்கப்படும். இதை எதிர்த்து வரும் 26-ம் தேதியன்று அகில இந் திய அளவில் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர் கள் முடிவு செய்துள்ளனர்.

ஒரே ஒரு சங்கம் மட்டும் இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் 21-ம் தேதியன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. எனவே, அன்றைய தினம் வங்கிப் பணிகள் பாதிப்படைவதற்கான வாய்ப்பில்லை. மேலும், வரும் 22, 23-ம் தேதி வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை நாளாகும். 24-ம் தேதி திங்கட்கிழமை வங்கி கள் வழக்கம்போல் செயல்படும். அதற்கு அடுத்த நாள் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு அரசு விடுமுறை. 26-ம் தேதி வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகள் இயங்காது. மற்றபடி சமூக வலை தளங்களில் பரவும் தகவலைப் போன்று வங்கிகளுக்கு வரும் 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை தொடர் விடுமுறை கிடையாது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close