[X] Close

வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை குறைவு


vegetables-prices-fall-in-koyambedu-market

  • kamadenu
  • Posted: 17 Dec, 2018 10:12 am
  • அ+ அ-

கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா ஆகிய இடங்களில் இருந்து காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை குறைந்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் கடந்த 2 மாதங் களாக காய்கறிகளின் வரத்து ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. இதனால் சில காய்கறிகளின் விலை உயர்வதும், சிலவற்றின் விலை அதிகரிப்ப துமாக இருந்தது.

தக்காளி கிலோ ரூ.15

இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக பல காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.18-க்கு விற்கப்பட்ட தக்காளியின் விலை, நேற்று ரூ.15 ஆக குறைந் துள்ளது. மேலும் சாம்பார் வெங்காயம், அவரைக்காய் தலா ரூ.35, முள்ளங்கி ரூ.8, பீட்ரூட் ரூ.18 என விலை குறைந்துள்ளது.

மற்ற காய்கறிகளான உருளைக்கிழங்கு, வெங்காயம் தலா ரூ.18, கத்தரிக்காய், பீன்ஸ், கேரட் ஆகியவை தலா ரூ.30, வெண்டைக் காய், பாகற்காய் தலா ரூ.25, முட்டைக்கோஸ் ரூ.8, புடலங்காய், பச்சை மிளகாய் தலா ரூ.20, முருங்கைக்காய் ரூ.70 என விற்கப்பட்டு வருகிறது.

இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

காரணம் என்ன?

காய்கறி விலை குறைந்திருப்பது தொடர் பாக கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்க பொதுச் செயலர் பி.சுகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது;

தற்போது தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் காய்கறிகளின் விலை குறைந் துள்ளது. இந்த காய்கறிகளின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close