தமிழ்நாடு மற்றும் புதுவை நபார்டு வங்கிக்கு புதிய தலைமை பொது மேலாளர் நியமனம்


இரா.ஆனந்த்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நபார்டு வங்கியின் புதியதலைமை பொது மேலாளராகஇரா.ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (ஜுன் 1-ம் தேதி) பொறுப்பேற்கிறார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் பொறியியல் கல்லூரியில் பயின்று வேளாண் பொறியாளரான ஆனந்த், நபார்டு வங்கியில் பணியில் சேர்வதற்கு முன்பு தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையில் 5 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

1993-ம் ஆண்டு நபார்டு வங்கியில் இணைந்த இவர், கடந்த 30 ஆண்டுகளாக இவ்வங்கியில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு துறையில் பல பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தனது பதவி காலத்தில் கிராமப்புற உள்கட்டமைப்பு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்களை கணினிமயமாக்கல், முழுமையான வளர்ச்சிக்கான விவசாயக் கடன்களை அதிகரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வேளாண் தொழில்நுட்பம், ஊரக பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுடன் இணைந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடு படப் போவதாக ஆனந்த் தெரிவித்துள்ளார்.