கோவையில் மூளைச்சாவு அடைந்த 10 மாத பெண் குழந்தையின் இதயம் ஒரு வயது குழந்தைக்கு பொருத்தம்


கோப்புப்படம்

சென்னை: கோவையில் மூளைச்சாவு அடைந்த 10 மாத பெண் குழந்தையின் இதயம் தானமாக பெறப்பட்டு சென்னையை சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தைக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

கோவையைச் சேர்ந்தவர் சரவணன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி தனியார் மருத்துவமனையில் செவிலியராக உள்ளார்.

இவர்களின் 10 மாத பெண் குழந்தை, விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மூளைச்சாவு அடைந்தது.

இதையடுத்து, குழந்தையின் பெற்றோர் சம்மதத்துடன் சென்னைதனியார் மருத்துவமனையில் ஒரு வயது பெண் குழந்தைக்கு, மூளைச்சாவு அடைந்த குழந்தையின் இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.