[X] Close

கோடியக்காடு சரணாலயத்தில் புயலால் 373 பறவைகள், 18 மான்கள் உயிரிழந்தன: முதல்கட்ட கணக்கெடுப்பில் தகவல்


animals-death-in-gaja

  • kamadenu
  • Posted: 12 Dec, 2018 10:45 am
  • அ+ அ-

நாகப்பட்டினம்

கஜா புயலால் கோடியக்காடு வன விலங்குகள் சரணாலயத்தில் 373 பறவைகள், 18 மான்கள் உயிரிழந்திருப்பது முதல் கட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

புயலால் நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், தலைஞாயிறு ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் உள்ள வன விலங்குகள் சரணாலயத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மரங் கள் புயல் காற்றில் வேரோடு சாய்ந்தன. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை மரக் குவியல்களா கவே காணப்பட்டன. இதனால் வன விலங்குகளின் கதி என்ன வாயிற்றோ என வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் மாவட்ட வன உயிரின காப்பாளர் நாகசதிஷ் கிடிசாலா தலைமையில் வனத் துறை ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கணக் கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வனச்சரகர் கிருஷ்ணமூர்த்தி கூறியபோது, “கஜா புயல் தாக்கத்தில் ஆயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. புயலால் 17 வெளி மான்களும், ஒரு புள்ளி மானும், 4 பன்றிகளும், 373 பறவை களும் உயிரிழந்திருப்பது முதல் கட்ட கணக்கெடுப்பில் தெரியவந் துள்ளது. கணக்கெடுப்பு பணி இன்னும் ஒரு வாரத்தில் நிறை வடையும். அப்போது, இறந்த விலங்குகள், பறவைகள் குறித்த முழுமையான விவரம் தெரிய வரும்” என்றார்.

பொலிவிழந்த நிலையில் உள்ள கோடியக்காட்டில் முன்புபோல் மரங்கள், மூலிகைச் செடிகளை நட்டுப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போதுதான் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். எனவே, இதை கருத்தில்கொண்டு கோடியக்காடு புதுப் பொலிவு பெற வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close